Enable Javscript for better performance
ஒருங்கிணைந்த முதியோர் திட்டத்தின் பெயர் மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

     

    ஒருங்கிணைந்த முதியோர் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக புதுவை சமூக நலத் துறை இயக்குநர் சாரங்கபாணி தெரிவித்தார்.
    இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் சமூக நீதி - அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வந்த ஒருங்கிணைந்த முதியோர்களுக்கான திட்டம் (ஐபிஓபி) பெயர் திருத்தம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மூத்தக் குடிமக்கள் திட்டம் (ஐபிஎஸ்ஆர்சி) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    இதுதொடர்பான விவரங்கள் ஜ்ஜ்ஜ்.ள்ர்ஸ்ரீண்ஹப்த்ன்ள்ற்ண்ஸ்ரீங்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் சமூக நலத் துறையில் பதிவு செய்துள்ள முதியோர்களுக்கு சேவை செய்யும் தொண்டு நிறுவனங்கள் அமைச்சகத்தின் நிதியுதவி பெறுவதற்கு ட்ற்ற்ல்://ய்ஞ்ர்ஞ்ழ்ஹய்ற்ள்த்ங்.ஞ்ர்ஸ்.ண்ய்/ய்ஞ்ர்-ப்ர்ஞ்ண்ய் என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 
    மேலும், விண்ணப்பத்தின் நகலை சமூக நலத் துறைக்கு வருகிற ஜூலை 31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai