Enable Javscript for better performance
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைப்பு- Dinamani

சுடச்சுட

    

    கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைப்பு

    By DIN  |   Published on : 30th June 2018 09:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 சிறுவர்களைப் பிடித்த போலீஸார், அவர்களை புதுச்சேரியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டனர்.
    புதுச்சேரியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், 18 வயதுக்கு உள்பட்ட 3 சிறுவர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.
    இதையடுத்து, அவர்களை கையும் களவுமாகப் பிடித்த போலீஸார் சிறுவர்கள் 3 பேரையும் புதுச்சேரியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர். மேலும், சிறுவர்களிடமிருந்து 107 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai