Enable Javscript for better performance
சிறுவர் பூங்கா அமைக்க பூமி பூஜை- Dinamani

சுடச்சுட

    

    காரைக்கால் தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் தார்ச்சாலை அமைத்தல், சிறுவர் பூங்கா அமைத்தலுக்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.
    காரைக்கால் தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகம் அருகில் உள்ள முருகையா பிள்ளை நகருக்கு சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி (2017-2018) ரூ. 6.21 லட்சம் செலவில் தார்ச் சாலை அமைக்கவும், சேத்திலால் நகர் பகுதியில் சிறுவர் பூங்கா தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12.50 லட்சத்தில் அமைக்கவும் சட்டப்பேரவை உறுப்பினர் அசனா ஒப்புதல் அளித்திருந்தார்.
    இவ்விரு திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தப்பணியை காரைக்கால் நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. திட்டப்பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அந்தந்தப் பகுதியில் நடத்தப்பட்டது. பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் எஸ்.சுபாஷ், உதவிப் பொறியாளர் ஏ.பழனிராஜா, இளநிலைப் பொறியாளர் ராவணன் மற்றும் அந்தந்தப் பகுதியின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 
    இவ்விரு திட்டப்பணிகளும் அடுத்த 4 மாதங்களில் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடுமென நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai