Enable Javscript for better performance
புதை சாக்கடை பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    புதை சாக்கடைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் கோரிக்கை விடுத்தார்.
    இதுகுறித்து புதுவை பொதுப் பணித் துறைத் தலைமைப் பொறியாளருக்கு ஓம்சக்தி சேகர் வெள்ளிக்கிழமை அனுப்பிய மனுவின் விவரம்:
    புதுவை மாநிலத்தில் நடைபெற்று வரும் புதை சாக்கடைப் பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கும் சூழல் நிலவுகிறது.
    பல்வேறு இடங்களில் புதை சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமலும், பல மாதங்களுக்கு முன்பு முடிக்கப்பட்ட இடங்களில் சாலைகள் சீரமைக்கப்படாமலும் உள்ளன.
    முதல்வர் தொகுதியான நெல்லித்தோப்பு தொகுதியில் பல்வேறு இடங்களில் மந்தகதியில் புதை சாக்கடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, வியாபார கேந்திரமாக விளங்கும் லெனின் வீதியில் நடைபெற்று வரும் புதை சாக்கடைப் பணிகளால் வியாபாரிகளும், பள்ளி, கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    எனவே, மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், புதை சாக்கடைப் பணிகளை விரைவுபடுத்தி போர்க்கால அடிப்படையில் முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai