Enable Javscript for better performance
பெவிக்கால் கிளப் உறுப்பினர்களுக்கு யோகா பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    சர்வதேச யோகா தினத்தையொட்டி, புதுச்சேரி பெவிக்கால் கிளப் உறுப்பினர்களுக்கு யோகா பயிற்சிகள் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டன.
    புதுச்சேரி பெவிக்கால் சாம்பியன் கிளப் 1, 2 ஆகியவை சார்பில் சர்வதேச யோகா தினம் வில்லியனூர் பிரதான சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, கிளப் உறுப்பினர்களுக்கு யோகா பற்றிய விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. யோகா கிளப்பின் தமிழ்நாடு - புதுச்சேரி பொறுப்பாளர் முத்துராமன் தலைமை வகித்தார். கிளப்பின் ஆலோசனைக் குழுத் தலைவர் பத்மநாபன் வரவேற்றார். புதுவை வில்லியனூர் மனவளக் கலை மன்றத்தின் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் திருநாவுக்கரசு யோகாவின் பலன்கள் குறித்து உரையாற்றினார். தொடர்ந்து, கிளப் உறுப்பினர்களுக்கு யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன. கிளப் செயலர் முத்துகிருஷ்ணன், கிளப் துணைத் தலைவர்கள் ஆனந்தன், வேலு, காசாளர்கள் ஞானவேலு, ரவிசண்முகம் உள்பட கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai