Enable Javscript for better performance
மேம்பாலப் பணி மந்தம்: விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    மேம்பாலப் பணி மந்தம்: விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியல்

    By DIN  |   Published on : 30th June 2018 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த 7 ஆண்டுகளாக மந்த கதியில் நடைபெற்று வரும் அரும்பார்த்தபுரம் மேம்பாலப் பணியைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    புதுவை அருமார்த்தபுரம் மேம்பாலம் கட்டத் தொடங்கி 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. மேம்பாலப் பணிகள் மந்த கதியில் நடைபெறுவதால் அந்தப் பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாலத்தை விரைந்து முடிக்கக் கோரி, பல்வேறு தரப்பினரும் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
    அதன் ஒரு பகுதியாக புதுவை மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உழவர்கரை, வில்லியனூர், கதிர்காமம் தொகுதிகளின் நிர்வாகிகள் சார்பில் மூலக்குளம் பகுதியில் சாலை மறியல் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்டவர்கள் மேம்பாலத்தை விரைந்து கட்டி முடிக்காத அரசைக் கண்டித்து, முழக்கங்களை எழுப்பினர்.
    இந்தச் சாலை மறியல் போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 
    முதன்மைச் செயலர் தேவபொழிலன் தலைமை வகித்தார். கட்சியின் அமைப்புச் செயலர் அமுதவன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் செல்வநந்தன், எழில்மாறன், ஆதவன், காந்திமதி, ரமேஷ், தமிழ்வளவன், கன்னியப்பன், இளந்தமிழன், ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். அப்போது போலீஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
    இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 150 பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் 
    விடுவிக்கப்பட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai