Enable Javscript for better performance
விழுப்புரம் - மேல்மருவத்தூர் பயணிகள் ரயில் நாளை ரத்து- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் - மேல் மருவத்தூர், மேல்மருவத்தூர் - விழுப்புரம் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 1) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே அலுவலகம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
    சென்னை அருகே ஒத்திவாக்கம் - கருங்குழி பகுதியில் ரயில்வே கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் மேல்மருவத்தூர் - விழுப்புரம் இடையே முற்பகல் 11.30 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045), விழுப்புரம் - மேல்மருவத்தூர் இடையே பகல் 1.55 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் (வண்டி எண் 66046) ஆகியவை ஜூலை 1-ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
    அதேபோல, சென்னை எழும்பூர் - புதுச்சேரி இடையே இயக்ககப்படும் பயணிகள் ரயில் (வண்டி எண் 56037), எழும்பூரில் காலை 6.35 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக 2 மணி நேரம் காலதாமதமாக காலை 8.35 மணிக்குப் புறப்படும். 
    இந்த ரயில் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
    புதுச்சேரி - எழும்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பயணிகள் ரயில் (வண்டி எண் 56038) புதுச்சேரியில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக ஒரு மணி நேரம் காலதாமதமாக 4.35 மணிக்கு புறப்படும்.
    புதுச்சேரி - திருப்பதி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் (வண்டி எண் 56042) ஜூலை 1-ஆம் தேதி மட்டும் விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும்.
    சென்னை எழும்பூரிலிருந்து குருவாயூர் செல்லும் குருவாயூர் விரைவு ரயில் (வண்டி எண் 16127) ஜூலை 1-ஆம் தேதி வழக்கமான நேரத்தைவிட, 1.30 மணி நேரம் காலதாமதமாக விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai