Enable Javscript for better performance
விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    புதுவை விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்று புதுவை வடக்கு மாநில திமுக அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் கோரிக்கை விடுத்தார்.
    இதுகுறித்து புதுவை முதல்வர் வே.நாராயணசாமியை வியாழக்கிழமை சட்டப்பேரவை அலுவலகத்தில் சந்தித்து அவர் அளித்த மனுவின் விவரம்: புதுவை மாநில விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய 
    ரூ. 21 கோடி நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். அரியூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை, லிங்கா ரெட்டிபாளையத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆகியவை முழுவீச்சில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனு அளிப்பின் போது, வடக்கு மாநிலப் பொருளாளர் செந்தில்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் லோகையன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai