Enable Javscript for better performance
வெங்கய்ய நாயுடு ஜூலை 6-இல் புதுச்சேரி வருகை- Dinamani

சுடச்சுட

    

    குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஜூலை 6-ஆம் தேதி புதுச்சேரிக்கு வருகை தரவுள்ளார்.
    தொடர்ந்து, அவர் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
    இதையொட்டி, அவருக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், வரவேற்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதுவை சட்டப்பேரவை அமைச்சரவைக் கூட அறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் நாராயணசாமி தலைமை வகித்தார். கல்வித் துறை அமைச்சர் இரா.கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் தலைமைச் செயலர் அஸ்வினி குமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, புதுவை காவல் துறைத் தலைமை இயக்குநர் சுனில்குமார் கெளதம், டி.ஐ.ஜி. சந்திரன், உள்ளாட்சித் துறை இயக்குநர் மலர்கண்ணன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai