Enable Javscript for better performance
பிரமோத்ஸவத்தில் ஆகம விதிகள் மீறப்படுவதாக தெரிவித்து சிவாச்சாரியார் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    பிரமோத்ஸவத்தில் ஆகம விதிகள் மீறப்படுவதாக தெரிவித்து சிவாச்சாரியார் உண்ணாவிரதம்

    By DIN  |   Published on : 24th March 2018 04:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் பிரமோத்ஸவ சுவாமி புறப்பாட்டில் ஆகம விதிகள் மீறப்படுவதாகக் கூறி, காரைக்காலைச் சேர்ந்த சிவாச்சாரியாரும், பிரமோத்ஸவ உபயதாரருமான பால சர்வேஸ்வர குருக்கள், அவரது வீட்டிலேயே வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.
    இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் பிரமோத்ஸவம் நடத்தப்படுகிறது. இவ்விழாவில் சுவாமி புறப்பாடு, வீதியுலா போன்ற நிகழ்வுகளின்போது சோமாஸ்கந்தர் சுவாமி புறப்பாட்டில் தொடர்ந்து ஆகம விதி மீறப்பட்டு வருகிறது. சோமாஸ்கந்தர் என்பது சுவாமி, உமையாம்பாள், ஸ்கந்தர், பீடம் ஆகியவை சேர்ந்ததுதான். ஆனால் 10 நாள் நிகழ்ச்சியில் இரண்டரை நாட்கள் நடைபெறும் விழாவின் போது மட்டும் அதாவது, 1-ஆம் நாள், 9 -ஆம் நாள், 10 -ஆம் நாள் காலை நடைபெறும் வைபவங்களின்போது மட்டும் இந்த முறை பின்பற்றப்படுகிறது.
    ஆனால் மற்ற நாட்கள் நடைபெறும் விழாவின்போது பீடம், உமையாம்பாள், ஸ்கந்தர் இல்லாமல் சுவாமி, தனி அம்பாள் மட்டும் வைக்கப்படுகிறது. சோமாஸ்கந்தரை இவ்வாறு பிரிப்பது ஆகம விதி மீறல்.
    இது சம்பந்தமாக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கோயில் நிர்வாகத்திடம் வாய் மொழியாகக் கூறி வந்தும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அண்மையில் கோயில் அறங்காவல் குழு நியமிக்கப்பட்ட பின்னர் அக்குழுவினர் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி ஆகியோரிடமும் எழுத்துப் பூர்வமாக தெரிவித்தேன். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
    தற்போது விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்விலும் இவ்வாறு பிரித்தே வைக்கப்பட்டிருந்தது. எனவே ஆகம விதிப்படி பிரமோத்ஸவத்தில் சோமாஸ்கந்தரை வீதியுலா உள்ளிட்ட நிகழ்வுகளில் புறப்பாடு செய்யும் வரை வீட்டிலேயே உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
    இவரது போராட்டம் குறித்து அரசுத்துறையினர், காவல்துறைனர் உள்ளிட்டோருக்கு தெரியவந்ததும், போலீஸார் அவரது வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பல்வேறு தரப்பினர் அவரை சந்தித்துப் பேசிவருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai