Enable Javscript for better performance
பேரவைக் கூட்டத் தொடர்: முதல்வர் தலைமையில் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    புதுவை முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
    வருகிற மார்ச் 26-ஆம் தேதி சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. முதல் நிகழ்ச்சியாக ஆளுநர் உரை இடம் பெறுகிறது. ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும், அன்றைய தினம் தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்தும் இறுதி செய்ய இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன.
    கூட்டத்தில் அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம், இரா.கமலக்கண்ணன், ஷாஜகான், மல்லாடி கிருஷ்ண ராவ், மு.கந்தசாமி, தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், ஆளுநரின் செயலர் தேவநீதிதாஸ், நிதித் துறைச் செயலர் கந்தவேல் உள்பட அனைத்துத் துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்குப் பின்னர் முதல்வர் நாராயணசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கிறார். மார்ச் 27, 28-ஆம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்தல், இடைக்கால நிதி நிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் உள்ளிட்டவை நடைபெறும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai