Enable Javscript for better performance
மாநில குங்ஃபூ போட்டியில் முதலிடம்: செய்யாறு பள்ளி மாணவிக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    மாநில குங்ஃபூ போட்டியில் முதலிடம்: செய்யாறு பள்ளி மாணவிக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 24th March 2018 02:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மாநில அளவிலான குங்ஃபூ போட்டியில் முதலிடம் பெற்ற செய்யாறு ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவிக்கு வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
    புதுச்சேரியில் மாநில அளவிலான ஜூனியர் குங்ஃபூ சேம்பியன் போட்டி அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்ற செய்யாறு ஆக்ஸ்போர்டு பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவி சு.பிரியதர்ஷினி வெற்றி பெற்று அந்த மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இதையடுத்து, மாணவி சு.பிரியதர்ஷினிக்கு புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி பரிசு வழங்கிப் பாராட்டினார்.
    இந்த நிலையில், செய்யாறு ஆக்ஸ்போர்டு பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சக்தி அறக்கட்டளை சார்பில் மாணவி சு.பிரியதர்ஷினிக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai