Enable Javscript for better performance
விவசாயிகள் உதவியுடன் நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும்: கிரண் பேடி- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகள் உதவியுடன் நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும்: கிரண் பேடி

    By DIN  |   Published on : 24th March 2018 04:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீர்நிலைகளை உள்ளூர் விவசாயிகளின் துணையுடன் தூர்வார வேண்டும் என்று புதுவை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற உலக தண்ணீர் தின கலந்துரையாடல் நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வலியுறுத்தினார்.
    உலக தண்ணீர் தினத்தையொட்டி, நீர்நிலைகளைச் சீரமைத்தல் தொடர்பாக அரசு அதிகாரிகள், சமூக அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ஆளுநர் கிரண் பேடி வியாழக்கிழமை இரவு நடத்தினார்.
    கூட்டத்தில் ஆளுநரின் செயலர் தேவநீதி தாஸ் வரவேற்றார். பொதுப் பணித் துறைஅமைச்சர் ஆ.நமச்சிவாயம், வேளாண் துறை அமைச்சர் இரா.கமலக்கண்ணன், கூட்டுறவுத் துறை அமைச்சர் மு.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    நீர்நிலைகளைப் பாதுகாக்க தனிக் கொள்கையை உருவாக்க வேண்டும். உள்ளூர் மக்களின் துணையுடன் நீராதாரங்களைப் பாதுகாக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தைப் பெருக்க அறிவியல் பூர்வமான தரவுகளைத் தயாரிக்க வேண்டும். நில பயன்பாட்டின் அடிப்படையில் நீர்க்கொள்கை வகுக்கப்பட வேண்டும். மழை காலத்துக்கு முன்பே திட்டமிட்டு நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும். உள்ளூர் விவசாயிகளின் துணையுடன் நீர்நிலைகள் தூர்வாரப்பட வேண்டும். நீர்நிலைகளில் திடக் கழிவுகள், திரவக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசுடன் தொடர்பு கொள்ள தனிப் பிரிவு அமைக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai