Enable Javscript for better performance
9 காவல் கண்காணிப்பாளர், 17 குடிமைப்பணி அதிகாரிகள்: பணியிடங்களை நிரப்ப ஆளுநரிடம் பாஜக வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    9 காவல் கண்காணிப்பாளர், 17 குடிமைப்பணி அதிகாரிகள்: பணியிடங்களை நிரப்ப ஆளுநரிடம் பாஜக வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 24th March 2018 04:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை காவல் துறையில் காலியாக உள்ள 9 காவல் கண்காணிப்பாளர், 17 குடிமைப்பணி அதிகாரிகள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடியிடம், மாநில பாஜக துணைத் தலைவர் ஏம்பலம் ஆர்.செல்வம் மனு அளித்து வலியுறுத்தினார்.
    இதுகுறித்து வியாழக்கிழமை அவர் அளித்த மனு விவரம்: புதுவை அரசின் காவல் துறையில் 9 காவல் கண்காணிப்பாளர் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளதால், சட்டம் - ஒழுங்கு அடிக்கடி சீர்குலைகிறது. தகுந்த காவல் ஆய்வாளர்களின் பணி மூப்பு அடிப்படையில், கண்காணிப்பாளர் பதவிகளை நிரப்புவதற்கு உடனடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    புதுவை அரசுப் பணிகளில் 16 குடிமைப் பணி (பி.சி.எஸ்) பதவிகள் தொடர்ந்து நிரப்பபடாமல் உள்ளன. இதனால் ஒரே உயர்நிலை அதிகாரிக்கு மூன்று துறைகளுக்கான பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், அரசு அதிகாரிகளுக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்படுவதுடன், முழுக் கவனமும் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
    இதனால், மக்கள் நலப் பணிகள் செயல்படுத்தப்படாமல் முடக்கப்படுகின்றன. ஆணையர் பதவி வகிக்கும் ஒருவர் கூடுதலாக துணை ஆட்சியர், தேர்தல் நடத்தும் அதிகாரி உள்ளிட்ட பல பொறுப்புகளைக் கவனித்து வருவதால், அவரால் அந்த துறைகளின் மீது சிறப்பான நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை.
    பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நேரடியாக துறை அதிகாரியிடம் சென்று வழங்க முற்படும்போது, இப்போதுதான் கூடுதலாக வழங்கப்பட்டுள்ள துறைக்கு அவர் சென்றிருக்கிறார் என்று பதிலளித்து பொதுமக்களை அலைக்கழிக்கின்றனர்.
    பணி மூப்பு அடிப்படையில் உள்ள அதிகாரிகளைக் கொண்டு புதுவை குடிமைப் பணி, காவல் கண்காணிப்பாளர் பதவி உயர்வுகளை நிரப்பாமல் காங்கிரஸ் அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
    காங்கிரஸ் அரசினுடைய நிர்வாகத் திறமையற்ற போக்கினால் பல நல்ல நேர்மையான அதிகாரிகளும், திறமையான அதிகாரிகளும் முறையே சார்புச் செயலர், துணைச் செயலர், இணைச் செயலர் பதவிகள் கிடைக்காமல் காத்துக் கிடக்கின்றனர்.
    இந்த விவகாரத்தில் ஆளுநர், தலைமைச் செயலர் ஆகியோர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய நேரத்தில் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    மாநில பாஜக வழக்குரைஞர் அணி நிர்வாகி அசோக்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள்உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai