Enable Javscript for better performance
ஆயுர்வேத மருத்துவ  விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி இந்திய முறை மருத்துவம், ஹோமியோபதி துறை ஆகியவை சார்பில் காலாப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ, ஆயுர்வேத மருத்துவ விழிப்புணர்வு, ரத்த சோகை தடுப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    முகாமில் சித்த மருத்துவ அதிகாரி செல்வராஜ் வரவேற்றார்.  சிறப்பு விருந்தினராக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் கலந்து கொண்டு முகாமைத் தொடக்கி வைத்தார்.  
    பின்னர், காலாப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய ஆம்புலன்ஸ் சேவையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அவர் அர்ப்பணித்தார். தாடர்ந்து,  மூலிகைக் குடில், கண்காட்சியை அவர் திறந்து வைத்தார். முன்னதாக, மகளிர் குழுக்களுக்கு நடத்தப்பட்ட பாரம்பரிய உணவுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசுகளை வழங்கினார்.
    முகாமில்,  சுகாதாரத் துறை இயக்குநர் ராமன், தேசிய ஊரக சுகாதாரத் திட்ட இயக்குநர் காளிமுத்து, துணை இயக்குநர் ரகுநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தலைமை மருத்துவ அதிகாரி ஸ்ரீதரன், ஹோமியோபதி மருத்துவத் திட்ட அதிகாரி இந்திரா ஆகியோர் ரத்த சோகை வருவதற்கான காரணங்கள், அதன் அறிகுறிகள், தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினர்.
    நிகழ்ச்சியில் காங்கிரஸ் வடக்கு மாவட்டத் துணைத் தலைவர் ஜோசப்,  காங்கிரஸ் நிர்வாகிகள், மாணவர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டனர். 
    மருத்துவர் சாந்தி பாய் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai