Enable Javscript for better performance
கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    பெங்களுரு எம்ஃபசிஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் அந்த நிறுவன மனித வளத் துறை மேலாளர் கிரண் பங்கேற்று, தங்களது  நிறுவனத்தின் விவரங்கள், பணிச் சூழல், எதிர்கால குறிக்கோள், ஊதியம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை விளக்கினார்.
    முகாமுக்கு மணக்குள விநாயகர் கல்விக் குழுமத் தலைவர் எம்.தனசேகரன், துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாரன், செயலர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் முகாமைத் தொடக்கிவைத்தார். அனைத்துத் துறை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
    முகாமில் மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தைச் சேர்ந்த மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, மயிலம் பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்புத் துறை அதிகாரி ஜெயக்குமார் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai