Enable Javscript for better performance
கவிதை நூல் வெளியீட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் கவிதை நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
    புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் அருணகிரியின் "நீரென்று ஒன்றிருந்தது' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா,  பிரான்ஸ் இதழாசிரியர் அமீனின் "தமிழ் நெஞ்சம்' இதழ் அறிமுக விழா ஆகியவை அண்மையில் நடைபெற்றன.
    கவிஞர் செல்வக்குமாரி வரவேற்றார்.  புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் கவிஞர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.
    தமிழ் எழுத்தாளர் கழகத்தைச் சேர்ந்த தமிழ்நெஞ்சன் கவிதை நூல் குறித்துப் பேசினார். "தமிழ் நெஞ்சம்' இதழை பாரதியார் பல்கலைக்கூடத்தின் முதல்வர் சிற்பி பிரபாகரன் அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். முன்னாள் அமைச்சர் ராஜவேலு தலைமை வகித்தார். ஏம்பலம் தொகுதியைச் சேர்ந்த லட்சுமி காந்தன் வாழ்த்துரைத்தார். கவிஞர் அருணகிரி ஏற்புரையாற்றினார்.
    கவிதை நூலில் உள்ள சில கவிதைகளை புதுச்சேரி பல்கலை. நிகழ்கலைத் துறை கலைஞர்கள் முருகவேல்,  சமணராஜா குழுவினர் பாடல்களாக உருமாற்றி இசை நிகழ்ச்சி நடத்தினர். கவிஞர் தமிழ்மொழி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
    விழாவுக்கான ஏற்பாட்டை பிரான்ஸின் தமிழ்நெஞ்சம் பதிப்பகம்,  புதுச்சேரி நடைவண்டி சிறுவர் கலை இலக்கியக் கழகம், கிருமாம்பாக்கம் அவதாரங்கள் கலைக் குழுவினர் இணைந்து செய்திருந்தனர். முனைவர் ஆயுதா நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai