Enable Javscript for better performance
சட்டப்பேரவையை முடக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சரிடம் மனு- Dinamani

சுடச்சுட

    

    சட்டப்பேரவையை முடக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சரிடம் மனு

    By DIN  |   Published on : 31st March 2018 10:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை சட்டப்பேரவையை முடக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் புதுவை நியமன எம்.எல்.ஏ.க்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
    சென்னை உயர் நீதின்றத் தீர்ப்பின் நகலைக் கொண்டு வந்த பின்னரும், சட்டப்பேரவைக்குள் பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனையடுத்து, புதுவை சட்டப்பேரவைத் தலைவர், முதல்வர், காவல் துறையினருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கை நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடுத்துள்ளனர்.
    மேலும்,  கட்சி மேலிடத்தில் இருந்து வந்த அழைப்பின் பேரில், புதுவை எதிர்கட்சித் தலைவர்  என்.ரங்கசாமியை அழைத்துக் கொண்டு, நியமன எம்.எல்.ஏ.க்கள் வி.சாமிநாதன்,  எஸ்.செல்வகணபதி ஆகியோர் வியாழக்கிழமை தில்லி சென்றனர். அங்கு, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை ரங்கசாமியுடன் அவர்கள் சந்தித்தனர். பின்னர் ரங்கசாமி உடனடியாக புதுச்சேரிக்கு திரும்பிவிட்டார். ஆனால், நியமன எம்.எல்.ஏ.க்கள் தில்லியில் தங்கியிருந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.  அப்போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் புதுவை அரசை உடனடியாக முடக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் மனு அளித்தனர்.
    அப்போது, உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை புதுவை அரசு செயல்படுத்தவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும்,  அதை ஏற்க மறுக்கும் பேரவைத் தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சட்டப்பேரவையை உடனடியாக முடக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
    இந்த நிலையில், கர்நாடக மாநில தேர்தல் மே மாதம் நடைபெறவுள்ள நிலையில்,  தற்போது புதுவை அரசை முடக்கினால் அது தேர்தலில் எதிரொலிக்கும். எனவே,  இன்னும் இரண்டு மாதங்கள் வரை புதுவை மாநிலத்தின் மீது மத்திய அரசு நேரடியாக எவ்வித நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai