Enable Javscript for better performance
சர்வதேச கபடிப் போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    சர்வதேச கபடிப் போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 31st March 2018 10:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சர்வதேச ஊரக கபடிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற புதுவை வீரர்களை சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி வெள்ளிக்கிழமை பாராட்டினார்.
    நேபாளம் தலைநகர் காத்மாண்டு திரிபுவன் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த மாதம் இந்தியா மற்றும் நேபாள தேசிய ஊரக விளையாட்டு அமைப்பு சார்பில் சர்வதேச ஊரக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.  இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.
    இந்தப் போட்டியில் தமிழகம்,  புதுவை,  ஹரியானா, உத்தரபிரதேசம்,  கேரளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 15 வீரர்கள் அடங்கிய இந்திய அணியினர் கபடி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் அவர்கள் தங்கப் பதக்கம் வென்றனர்.
    இந்த அணியில் இடம் பெற்றிருந்த புவியரசன்,  சத்தியராஜ், கார்த்திகேயன்,  பிரேம்குமார்,  கோபி,  அஜித்,  ரகு,  இளமுருகன்,  புருசோத்தமன், சிவன், விஜயபாலன்,  பாலா ஆகிய 12 பேர் வெள்ளிக்கிழமை புதுச்சேரிக்கு திரும்பினர். 
    அவர்கள் சமூக நலத் துறை கந்தசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். பதக்கம் வென்ற கபடி வீரர்களை அமைச்சர் கந்தசாமி பாராட்டினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai