Enable Javscript for better performance
புதுவை ஆளுநர் திடீர் தில்லி பயணம்- Dinamani

சுடச்சுட

    

    புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வெள்ளிக்கிழமை திடீர் பயணமாக தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
    புதுவையில் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமன விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.  இந்த பிரச்னை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் கிரண் பேடி ரகசிய அறிக்கை அனுப்பினார். இந்த நிலையில்,  பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அழைப்பின் பேரில் புதுவை எதிர்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி தில்லிக்கு வியாழக்கிழமை சென்றார். அதேபோல, பாஜக நியமன எம்.எல்.ஏ.க்களும் தில்லிக்குச் சென்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்தனர். 
    இந்த நிலையில்,  துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தில்லிக்கு வெள்ளிக்கிழமை சென்றார். பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் கிரண் பேடி தில்லிக்குச் சென்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai