Enable Javscript for better performance
புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளியையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதை நினைவு கூரும் வகையில், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டருக்கு முந்தைய 40 நாள்களை தவக் காலமாகக் கடைப்பிடித்து வருகின்றனர். தவக் காலங்களில் இயேசு கிறிஸ்துவின் பாடுகளை பறைசாற்றும் வகையில், வெள்ளிக்கிழமை தோறும் சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
    தவக் கால இறுதியில் வரும் வியாழக்கிழமை இயேசு கிறிஸ்து தனது சீடர்களின் பாதங்களை கழுவியதை நினைவு கூரும் நிகழ்ச்சி நடைபெறும்.  அந்த வகையில் வியாழக்கிழமை நள்ளிரவு வரை அனைத்து தேவாலயங்களிலும் புனித வியாழன் அனுசரிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற பங்குத் தந்தைகள்,  தேவாலயத்துக்கு வந்த கிறிஸ்தவர்களின் பாதங்களைக் கழுவினர்.
    இதனைத் தொடர்ந்து, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் புனித வெள்ளி சிலுவைப் பாதை ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து, புனித ஜென்மராக்கினி மாதா ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து,  புதுவை - கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் முதன்மை குரு அருளானந்தம்,  பங்குத் தந்தை அல்போன்ஸ் சந்தானம், உதவிப் பங்குத் தந்தை யேசுராஜ் ஆகியோர் சிலுவை சுமந்து சென்றனர்.  இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பாடுகளை பாடல்களாகப் பாடிச் சென்றனர்.
    இதேபோல, தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, வில்லியனூர் மாதா ஆலயம், நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai