Enable Javscript for better performance
பேரவைத் தலைவர், துணைத் தலைவர்  இலங்கைப் பயணம்- Dinamani

சுடச்சுட

    

    புதுவை சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம்,  துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து ஆகியோர் இலங்கைக்கு வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றனர்.
    அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் "கம்பன் விழா 2018' கொழும்புவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க புதுவை சட்டப்பேரவைத் தலைவர்,  துணைத் தலைவர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். எனவே, அவர்கள் இலங்கை புறப்பட்டுச் சென்றனர்.
    தமிழகத்தில் இருந்து தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி,  திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார்,  குழந்தைகள் அறுவைச் சிகிச்சை நிபுணர் பிரியா ராமச்சந்திரன்,  புலவர் மா.ராமலிங்கம்,  பேராசிரியர் மு.ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.
    ஆன்மிகச் சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜ் தலைமையில் பட்டிமன்றம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. விழாவில், மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன், இலங்கை வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜி லிங்கம்,  பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர். புதுவை பேரவைத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் ஞாயிற்றுகிழமை மாலை 5.30 மணிக்கு சிறப்புரையாற்றுகின்றனர்.
    விழாவில்  இலங்கை பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்பட 6 பேர் கெளரவிக்கப்படவுள்ளனர். 
    இலங்கை அமைச்சர்கள் ரவுப் ஹக்கீம்,  மனோ கணேசன்,  இலங்கை தொழிலாளர்கள் காங்கிரஸ் தலைவர் ஆறுமுக தொண்டைமான், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு கம்பன் புகழ் விருது  வழங்கப்படவுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai