Enable Javscript for better performance
மது விற்ற 6 பேர் கைது: ரூ. 30 ஆயிரம் அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    மகாவீர் ஜயந்தியின் போது தடையை மீறி மது விற்பனை செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    மகாவீர் ஜயந்தியையொட்டி, புதுச்சேரியில் கள், சாராயம், மது மற்றும் பார்கள் உள்பட அனைத்து வகை மதுக் கடைகளும்,  மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டது.
    இருப்பினும், பல இடங்களில் ரகசியமாக மது விற்பனை நடைபெற்றது. இந்த நிலையில், கலால் துறை வட்டாட்சியர்கள் அருண் அய்யாவு,  குமரன்,  துணை வட்டாட்சியர்கள் குமரவேல்,  தேவதாஸ் ஆகியோர் தலைமையில் 4 பறக்கும் படையினர் புதுச்சேரி முழுவதும் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
    அப்போது, புதுச்சேரி கிராமப்புறப் பகுதிகளில் ஊருக்கு ஒதுக்குப் புறமாகவும்,  புதர் நிறைந்த பகுதிகளிலும் தடையை மீறி மது விற்பனை செய்வது தெரிய வந்தது.
    இதனையடுத்து, கலால் துறை அதிகாரிகள் மது விற்பனை செய்த 
    6 பேரை கைது செய்து, ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், அவர்களிடமிருந்து 100 மதுப் புட்டிகள், 150 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai