Enable Javscript for better performance
மருத்துவக் கலந்தாய்வு: சான்றிதழ்கள் பதிவேற்றத்துக்கு கால அவகாசம் நீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவக் கலந்தாய்வு: சான்றிதழ்கள் பதிவேற்றத்துக்கு கால அவகாசம் நீட்டிப்பு

    By DIN  |   Published on : 31st March 2018 10:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மருத்துவக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
    புதுவை முதுநிலை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களில் சிலர் தங்களது ஆவணங்களை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரினர்.  இதன் காரணமாக, ஆவணங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
    அதன்படி, மாணவர்கள் சனிக்கிழமை (மார்ச் 31) வரை சான்றிழ்கள் உள்ளிட்ட ஆவணங்களைப் பதிவேற்றம், பதிவேற்றியதில் திருத்தம் ஆகியவற்றைச் செய்து கொள்ளலாம். ஏப்ரல் 2-ஆம் தேதி முன்னுரிமை அடிப்படையில் திருத்தம் செய்யலாம். 
    எனவே, மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கவனமுடன் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும்,  மருத்துவப் படிப்புக்கான புதுச்சேரி பொதுப் பிரிவு - 52,  ஓபிசி - 142,  எம்பிசி - 78,  எஸ்சி - 37,  இபிசி - 9,  பிசிஎம் - 7 என மொத்தம் 325 பேர் விண்ணப்பித்துள்ளனர். 
    சிறப்பு ஒதுக்கீடு பிரிவின் கீழ் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் - 21,  விளையாட்டு வீரர்கள் - 4,  முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் - 7, மாற்றுத் திறனாளிகளில் ஒருவரும் விண்ணப்பித்துள்ளனர்.
    அதேபோல, பல் மருத்துவப் படிப்புக்கான புதுச்சேரி பொதுப் பிரிவு - 14,  ஓபிசி - 31,  எம்பிசி - 11,  எஸ்சி - 9,  இபிசி - 1, பிசிஎம் - 3 என 69 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  சிறப்பு ஒதுக்கீடு பிரிவின் கீழ் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் -3,  விளையாட்டு வீரர்கள் - 1,  முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் - 6 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
    பிற மாநிலத்தவருக்கான பிரிவில் மருத்துவப் படிப்புக்கு 1,508 பேரும், பல் மருத்துவப் படிப்புக்கு 95 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ர கவுடு தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai