Enable Javscript for better performance
முதல்வர் தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக அரசு என்ன நடவடிக்கை எடுப்பது என்று முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்தினர். அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம்,  மல்லாடி கிருஷ்ணாராவ்,  மு.கந்தசாமி,  எம்.ஓ.ஹெச்.எப்.ஷாஜகான்,  பேரவைத் துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து,  எம்.எல்.ஏ.க்கள் க.லட்சுமி நாராயணன்,  ஜெயமூர்த்தி, அனந்தராமன், தனவேலு, விஜயவேணி,  எம்.என்.ஆர்.பாலன்,  தீப்பாய்ந்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    காரைக்காலில்அமைந்துள்ள கோயில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமைச்சர் இரா.கமலக்கண்ணன் பங்கேற்கச் சென்றதால், கூட்டத்துக்கு அவர் வரவில்லை. கூட்டத்தில் பங்கேற்க திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களும் பங்கேற்கவில்லை. திமுக எம்.எல்.ஏ.க்கள் சிவா,  கீதா ஆனந்தன் ஆகியோர் ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க சென்னைக்குச் சென்று விட்டதால் அவர்கள் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai