Enable Javscript for better performance
முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா- Dinamani

சுடச்சுட

    

    புதுவை மாநிலத்தில் அமைந்துள்ள பல்வேறு முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
    அதன்படி, புதுச்சேரி அருகே உள்ள காலாப்பட்டில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி, கடந்த சில நாள்களுக்கு முன்னர் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு  பூஜைகள், சுவாமி வீதி உலா புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
    விழாவின் முக்கிய நிகழ்வான செடல் உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கிரேன், பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்களில் தொங்கியபடி பறவைக் காவடியாக  ஊர்வலமாக வந்தனர். பறவைக் காவடியாக வந்த பக்தர்கள் கிழக்குக் கடற்கரைச் சாலை பங்களா வீதி வழியாக கோயிலை அடைந்து 70 அடி ராஜ கோபுரத்துக்கு தாங்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அபிஷேகம் செய்தனர். இதேபோல, புதுவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு முருகன் கோயில்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது உடலில் அலகு குத்தியும், காவடி எடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றினர். 
    விழாவையொட்டி, கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai