Enable Javscript for better performance
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தெருமுனை பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தெருமுனை பிரசாரம்

    By DIN  |   Published on : 31st March 2018 10:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஹைட்ரோ கார்பன்,  மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக புதுச்சேரியில் தமிழ் தமிழர் இயக்கம் சார்பில் தெருமுனை பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    காவிரி உரிமைப் பறிப்பு,  வேளாண் நிலங்களில் மீத்தேன்,  ஹைட்ரோ கார்பன் எரி எண்ணெய் கிணறு போன்ற பேரழிவுத் திட்டங்களைத் தமிழகத்தில் திணித்து தமிழர் வாழ் வாதாரத்தை அழிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும்,  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரியும் புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தில் தமிழ் தமிழர் இயக்கம் சார்பில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.
    பிரசாரக் கூட்டத்துக்கு தமிழ் தமிழர் இயக்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் பிரதாப் சந்திரன் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் மகேஷ் முன்னிலை வகித்தார்.  தமிழ் தமிழர் இயக்கத்தின் அமைப்புச் செயலர் பரிதி,  தமிழர் தன்மான பேரவை நிர்வாகி சு.சா.ராசான், பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கோகுல்காந்தி, அலைகள் இயக்க நிர்வாகி வீர.பாரதி,  நாம் தமிழர் கட்சியின் தொகுதிப் பொறுப்பாளர்கள் வெ.கார்த்திகேயன், மதியழகன்,  ரமேசு,  தமிழ்த் தேசியப் பேரியக்கச் செயலர் இரா.வேல்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ் தமிழர் இயக்கத் நிர்வாகி மு.சுதாகர் நன்றி கூறினார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai