Enable Javscript for better performance
அங்கன்வாடி ஊழியர்கள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பில் பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
     போராட்டத்துக்கு பாலமோகனன் தலைமை வகித்தார். பிரேம தாசன் உண்ணாவிரதத்தை தொடக்கிவைத்தார்.
     போராட்டத்தில், பணி நிரந்தரம் செய்யப்பட்டு 3 ஆண்டுகள் கூட பணி செய்யாமல் வயதைக் காட்டி பணி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க வேண்டும், 6-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி அங்கன்வாடி, உதவியாளர்களுக்கு வழங்க வேண்டிய 50 சதவிகித நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் மாத இறுதி நாளில் ஊதியம் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள 4 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், அனைத்து அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர். நிர்வாகிகள் கலா, ராஜலட்சுமி, சுமதி, ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன், கிறிஸ்டோபர், மோகனகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai