Enable Javscript for better performance
நீர்நிலை மேம்பாட்டுப் பணிகளை கவனிக்க தனி கட்செவி அஞ்சல் குழு- Dinamani

சுடச்சுட

    

    நீர்நிலை மேம்பாட்டுப் பணிகளை கவனிக்க தனி கட்செவி அஞ்சல் குழு  

    By  புதுச்சேரி  |   Published on : 18th May 2018 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீர்நிலை மேம்பாட்டுப் பணிகளை உன்னிப்பாக கவனிக்க தனி கட்செவி அஞ்சல் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
     புதுவையில் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை மேம்படுத்துவதில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அதிக ஆர்வம் காட்டி வருகிறார். புதுவையில் புதிய நீர்க்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக ஏற்கெனவே ஆளுநர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆளுநர் கிரண் பேடி ஒருமாதத்துக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், 2-ஆம் கட்டமாக ஆளுநர் மாளிகையில் அதிகாரிகளை அழைத்து அவர் ஆலோசனை நடத்தினார்.
     புதுவை அரசின் வேளாண் செயலர் அன்பரசு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். புதுவையில் உள்ள படுகை அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்டவற்றில் நீர் சேமிப்பு செய்ய கடந்த ஒரு மாதத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், புதுவை-தமிழக எல்லைப் பகுதியில் ஆற்றுப்படுகை பகுதிகளில் நீர்சேமிப்புக்காக தமிழக அதிகாரிகளுடன் இணைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். ஊசுடு ஏரியில் எழுந்துள்ள நீர் பிரச்னைகள் தொடர்பாக ஆய்வு செய்யும்படி அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார். இப்பணிகளை உன்னிப்பாக கவனிக்கவும், கருத்துப் பரிமாற்றம் செய்யும் வகையிலும் கட்செவி அஞ்சல் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai