Enable Javscript for better performance
பெண் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும்: கிரண் பேடி- Dinamani

சுடச்சுட

    

    பெண் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும்: கிரண் பேடி

    By  புதுச்சேரி,  |   Published on : 18th May 2018 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kiranbedi

    பிளஸ் 2 படிப்புக்கு பின்பும் பெண் பிள்ளைகளை படிக்க வைக்க பெற்றோர்கள் முன்வர வேண்டும். அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அறிவுறுத்தினார்.
     பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சல் மூலம் வியாழக்கிழமை வெளியிட்ட தகவல்:
     பள்ளிப் படிப்பை முடித்த பிறகு பெண்களுக்கு என்ன நடக்கிறது? உண்மையில் அவர்கள் வாழ்க்கையில் உயரும் வகையில் நடத்தப்படுகின்றனரா? பெற்றோரின் பழைமைவாத நம்பிக்கையால் பலர் மேல்படிப்பு படிக்கும் வாய்ப்பை இழக்கின்றனர்.
     தனிப்பட்ட முறையில் மாணவிகளிடம் பேசும்போது தொடர்ந்து படிக்க விரும்புவதாகவும், பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்க வேண்டாம் என்று கூறுமாறும் தெரிவிக்கின்றனர்.
     இதுகுறித்து பெற்றோர்களிடம் யார் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது இங்கு கேள்வியாக உள்ளது.
     புதுவையில் கிராம பஞ்சாயத்து அமைப்பும் இல்லை.
     இருப்பினும் பிளஸ் 2 தேர்வில் மாணவிகள் அதிகம் சாதிக்கும் திறனை பெற்றுள்ளனர். அவர்களின் கஷ்டம் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. எனவே, பெண்களை மேல்படிப்பு படிக்க வைப்பதற்கான சமூக சீர்திருத்தம் தேவை. அதற்கு சம்பந்தப்பட்ட அனைவரும் முக்கிய பங்காற்ற வேண்டும்.
     புதுச்சேரியில் பெண்கள் மிகவும் சுறு, சுறுப்பாக உள்ளனர். திறமையானவர்களாகவும், சம்பாதிப்பவர்களாகவும் இருந்தால் ஆண்களை சார்ந்து இருப்பது குறையும்.
     ஆண்களில் சிலர் தங்கள் குழந்தைகளின் பள்ளி கட்டணத்தைக்கூட செலுத்தாமல், தாங்கள் சம்பாதிப்பதை மது அருந்தவே செலவு செய்கின்றனர்.
     தந்தை வீட்டை விட்டு வெளியேறிவிட்டாலோ, மதுபோதைக்கு அடிமையாகியிருந்தாலோ தனியார் பள்ளிகளில் படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு கட்டணம் செலுத்துவதில்லை என்று பல புகார்கள் ஆளுநர் மாளிகைக்கு வருகிறது.
     பெண்கள் தொடர்ந்து படிக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பிளஸ் 2 வகுப்புக்கு பின்னர் பெண் பிள்ளைகளை படிக்க வைக்க பெற்றோர் முன்வர வேண்டும். அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் கிரண் பேடி.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai