Enable Javscript for better performance
மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் மீது வழக்கு

    By  புதுச்சேரி,  |   Published on : 18th May 2018 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பாக புதுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
     புதுச்சேரி வீராம்பட்டினத்தில் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 8-ஆம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியிடம் அங்கு பணிபுரியும் ஆசிரியர் புவியரசன் கடந்த ஆண்டில் அடிக்கடி செல்லிடப்பேசியில் பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
     இதுகுறித்த புகாரின் மீது குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு விசாரணை நடத்தியதில், மாணவிக்கு ஆசிரியர் புவியரசன் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது உறுதியானது. இதையடுத்து, புவியரசனை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டது.
     மேலும், இதுகுறித்து கல்வித் துறை இணை இயக்குநர் சோமசுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் ஓராண்டாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணை புதன்கிழமை நிறைவு பெற்றது.
     இதிலும் ஆசிரியர் புவியரசு மீதான புகார் உறுதியானது.
     இதையடுத்து, அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் மீது, போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் புவியரசன் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai