Enable Javscript for better performance
மார்க்சிஸ்ட் பிரமுகர் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மார்க்சிஸ்ட் பிரமுகர் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது

    By  புதுச்சேரி,  |   Published on : 18th May 2018 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை மாநிலம் மாஹேவில் மார்க்சிஸ்ட் பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
     இவ்வழக்கில் ஏற்கெனவே மூன்று பேரை மாஹே போலீஸார் கைது செய்துள்ளனர்.
     புதுவை மாநிலத்துக்கு உள்பட்ட கேரள எல்லைக்கு அருகே உள்ள மாஹே பிராந்தியம், பள்ளூர் பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் கன்னிபோழில் பாபு (45), கடந்த 7-ஆம் தேதி மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து பள்ளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே மாஹேவை ஒட்டியுள்ள கேரள எல்லைப்பகுதியில் பாஜக பிரமுகர் ஷமேஜ் (35) என்பவர் இதேபோல் படுகொலை செய்யப்பட்டார். கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக பிரமுகர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதால் மாஹே மற்றும் அதையொட்டிய கேரள பகுதியில் பதற்றம் நிலவியது.
     இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி தலைமையிலான போலீஸார் மாஹே பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கன்னிபொழில் பாபு கொலை வழக்கு தொடர்பாக முதுநிலை எஸ்.பி. அபூர்வா குப்தா தலைமையில், எஸ்பி. தெய்வசிகாமணி மற்றும் 8 ஆய்வாளர்கள், 2 உதவி ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.
     அதில், பள்ளூரைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் நிஜேஷ் (34) என்பவரை கடந்த மே 13-ஆம் தேதி போலீஸார் கைது செய்தனர். மேலும், ராஜேஷ், கரிகுன்னுமல் சுனில், ஜெரின் சுரேஷ், பந்தக்கள் சரத், ஷம்ஜித் மற்றும் பலர் இந்த வழக்கில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
     இதையடுத்து கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், பானூரை சேர்ந்த ஜெரின் சுரேஷ் (31), மாஹே பள்ளூரைச் சேர்ந்த சரத் (26) ஆகியோரும் அதே தினத்தில் கைது செய்யப்பட்டனர்.
     இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில் செவ்வாய்க்கிழமை கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், பன்னூரை சேர்ந்த ஜித்து (எ) ஷம்ஜித் (21) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவருடைய கூட்டாளி அப்பு(எ)அருண் பாஸ்கர் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து கத்தி, செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து புதுவை காவல்துறை இயக்குநர் சுனில்குமார் கெüதம் கூறியதாவது:
     கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கண்ணிபோழில் பாபுவின் இறுதி சடங்கு ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை 63 நபர்களின் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் தனிப்பட்ட ஈடுபாடுகளை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கேரளா காவல்துறையிடம் இருந்தும் சிசிடிவி காட்சிகளை பெறவும் முயற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த வழக்கை விரைவுப்படுத்துவதற்காக ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
     தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடும் பணி நடக்கிறது என்றார் சுனில்குமார் கெüதம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai