Enable Javscript for better performance
ரசாயன ஆலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தனியார் ரசாயன ஆலையைக் கண்டித்து, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் தனியார் ரசாயன ஆலையை தடை செய்ய வேண்டும், அங்கு போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும், ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், ரசாயன தொழிற்சாலைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சோசியலிஸ்ட் யூனிடி சென்டர் ஆஃப் இந்தியா (கம்யூனிஸ்ட்) சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     மாநில செயலாளர் லெனின்துரை தலைமை வகித்தார் கட்சியின் தொழிற்சங்க பொதுச்செயலாளர் முத்து, காலாப்பட்டு தொகுதிச் செயலாளர் ரவி மற்றும் பெரிய காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி, கனகசெட்டிக்குளம் பகுதி மக்கள் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai