ஐயப்பன் கோயில் விஷயத்தில் கேரள அரசு தலையிடக் கூடாது

மத நம்பிக்கையில்லாத கேரள அரசு ஐயப்பன் கோயில் விஷயத்தில் தலையிடக் கூடாது என்று புதுவை ஐயப்ப சுவாமி பக்தர்கள் குழு வலியுறுத்தியது.

மத நம்பிக்கையில்லாத கேரள அரசு ஐயப்பன் கோயில் விஷயத்தில் தலையிடக் கூடாது என்று புதுவை ஐயப்ப சுவாமி பக்தர்கள் குழு வலியுறுத்தியது.
இதுதொடர்பாக, அந்தக் குழுவின் தலைவர் அன்பழகன் வெள்ளிக்கிழமை புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை என்பது ஐதீக முறையிலானது. இதற்கு உச்ச நீதிமன்ற உத்தரவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மதம் சார்ந்த விஷயங்களில் நம்பிக்கையில்லாத கேரள அரசு இதில் தலையிடுவது சரியல்ல. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தில் அவர்களால் 48 நாள்கள் விரதம் இருக்க முடியாது. எனவே, 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com