அரசுத் துறை கருத்துக் கேட்பு தகவல்களை தமிழில் வெளியிட வலியுறுத்தல்

புதுவையில் அரசுத் துறை கருத்துக் கேட்பு தகவல்கள் அனைத்து தரப்பு மக்களிடம் சேருவதற்கு ஏதுவாக தமிழில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

புதுவையில் அரசுத் துறை கருத்துக் கேட்பு தகவல்கள் அனைத்து தரப்பு மக்களிடம் சேருவதற்கு ஏதுவாக தமிழில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 
இதுகுறித்து,  புதுவை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வீரராகவன் வெளியிட்ட அறிக்கை:
புதுவையில் 99 சதவீத மக்கள் தமிழ் மொழிதான் பேசி வருகின்றனர். ஆனால், புதுச்சேரிக்கு வரும் அதிகாரிகள் தமிழைப் புறக்கணிக்கும் வகையிலேயே செயல்பட்டு வருகின்றனர். இங்கு, பணியாற்ற வந்து குறிப்பிட்ட காலங்களுக்குள் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதியையும் அவர்கள் பின்பற்றுவதில்லை. இதன் மூலம் மக்களிடமிருந்து குறிப்பாக, கிராமப்புற மக்களிடமிருந்து அவர்கள் விலகியே இருந்து வருகின்றனர்.
அவ்வாறே புதுச்சேரி எரிசக்தி முகமை மேலாண் இயக்குநர் செயல்பட்டுள்ளார். புதுச்சேரி எரிசக்தி முகமை புதுச்சேரி ஆற்றல் பாதுகாப்பு கட்டடக் குறியீடு மற்றும் கட்டட விதிகள் 2018 உருவாக்கவுள்ளது.  இதற்காக பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டுள்ளது.  இதுகுறித்து விளம்பரம் தற்போது தமிழ் செய்தித் தாள்களிலும் வந்துள்ளன.
ஆனால், இந்த விளம்பரம் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் அறிந்த மக்களிடம் இருந்து கருத்துகளை அறிய ஆங்கிலத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. புதுவையில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களிடமும்  கருத்து கேட்கும் வகையில், இந்த விளம்பரம் தமிழில் கொடுக்கப்பட வேண்டும்.  தமிழிலும் கருத்துத் தெரிவிக்க வழிவகை செய்ய வேண்டும். இணையத்தில் மட்டும் கருத்து தெரிவிக்க வழி செய்யாமல்,  கடிதம் மூலமும் கருத்துகளைக் கேட்டறிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com