அரசு கல்லூரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தாகூர் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான வழிகாட்டுதல், ஆலோசனை நிகழ்ச்சி கல்லூரி கருத்தரங்கக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தாகூர் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான வழிகாட்டுதல், ஆலோசனை நிகழ்ச்சி கல்லூரி கருத்தரங்கக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இளங்கோ தலைமை வகித்து,   மாணவிகளின் நலன் எவ்வாறெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது குறித்தும்,  பாதுகாப்புக்கான நோக்கம்,  அதன் முக்கியத்துவம்,  கல்வியின் மேன்மை குறித்தும் உரையாற்றினார்.  ஆங்கிலத் துறைத் தலைவர் கலா பெண் பாதுகாப்பு குறித்த சிந்தனைகளை சுட்டிக் காட்டிப் பேசினார். பேராசிரியர் துளசி மாணவிகள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும், பேராசிரியை விஜயராணி  மாணவிகள் விழிப்புணர்வுடன் இருப்பது குறித்தும், பேராசிரியை ஜெயலட்சுமி மாணவிகளின் பாதுகாப்பு நலன் குறித்தும் உரையாற்றினர்.
உளவியல் துறைப் பேராசிரியர் ரோசலின் பிரபா "உன் பாதை உன் பயணம்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் 200}க்கும் மேற்பட்ட முதலாமாண்டு மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை கல்லூரி மகளிர் நலப் பிரிவு அமைப்புக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com