பத்தாம் வகுப்பு: தனித் தேர்வர்கள் இன்று முதல் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) தனித் தேர்வு எழுதுவோர் தங்களது தேர்வுக் கூட அனுமதிச் சீட்டை சனிக்கிழமை (செப்.15) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று புதுவை அரசு பள்ளிக் கல்வித் துறை இணை இயக்க

பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) தனித் தேர்வு எழுதுவோர் தங்களது தேர்வுக் கூட அனுமதிச் சீட்டை சனிக்கிழமை (செப்.15) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று புதுவை அரசு பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் குப்புசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செப்டம்பர்,  அக்டோபரில் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுத அரசு தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களில் விண்ணப்பித்த அனைத்து தனித் தேர்வர்களும் (தத்கல் உள்பட) செப். 15-ஆம் தேதி பிற்பகல் முதல்  ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்  ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்  என்ற இணையதளத்துக்குச் சென்று  நநகஇ நஉடபஉஙஆஉத, ஞஇபஞஆஉத 2018 உலஅஙஐசஅபஐஞச-ஏஅகக பஐஇஓஉப ஈஞரசகஞஈ என்ற வாசகத்தை கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதியைப் பதிவு செய்தால் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  உரிய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com