ஜிப்மரில் குழந்தைகள் மருத்துவ கருத்தரங்கம்

ஜிப்மர் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் நலத்துறை, வேலூர் சிஎம்சி, சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை

ஜிப்மர் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் நலத்துறை, வேலூர் சிஎம்சி, சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை இணைந்து நடத்திய பச்சிளம் குழந்தைகள் பற்றிய மருத்துவ ஆய்வுகளை மையமாகக் கொண்ட கருத்தரங்கம் ஜிப்மரில் அண்மையில் நடைபெற்றது.
நியோகோர் என்ற தலைப்பில் 3 நாள்கள் நடைபெற்ற இந்த கருத்தரங்கை ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குநர் ராகேஷ் அகர்வால் தொடக்கி வைத்தார்.
 இதில் பச்சிளம் குழந்தைகளின் பிரச்னைகள் குறித்த நிபுணர்களின் விளக்கவுரைகள் இடம்பெற்றன. 
கருத்தரங்கின் முதல் நாளில் தாய்ப்பால் மேலாண்மை மற்றும் தாய்ப்பால் வங்கி செயல்பாடு, 
மூச்சுத் திணறல் கண்ட பச்சிளம் குழந்தைகளுக்கு அவசர கால மருத்துவ உதவி, மூளை பாதித்த குழந்தைகளுக்கு குளிரூட்டல் மருத்துவம் ஆகியவை குறித்த பயிலரங்குகள் நடைபெற்றன. 
இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த மருத்துவர்கள் 50 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். 
கருத்தரங்கில் பச்சிளம் குழந்தைகளின் நலன் மேம்பட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 
ஜிப்மர் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் விஷ்ணுபட், பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை பாதிப்பு குறித்து சிறப்புரையாற்றினார். 
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தை நலத்துறை தலைவர் அசோக் டியோராரி சிறப்புரை நிகழ்த்தினார். 
ஜிப்மர் மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் அசோக் சங்கர் படே, பச்சிளம் குழந்தைகள் நலத்துறை தலைவர் ஆதிசிவம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை ஜிப்மர் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைத் துறையினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com