21 பாப்ஸ்கோ மதுக் கடைகளுக்கு சீல்

புதுச்சேரி,  காரைக்காலில் உரிமத்தை புதுப்பிக்காத 21 பாப்ஸ்கோ மதுக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

புதுச்சேரி,  காரைக்காலில் உரிமத்தை புதுப்பிக்காத 21 பாப்ஸ்கோ மதுக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
 பாசிக், பாப்ஸ்கோ, அமுத சுரபி, கான்பெட் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்களை லாபகரமாக இயக்க மதுக் கடை உரிமம் வழங்கப்பட்டது.  
நிதி நிலையில் கடும் பாதிப்பில் உள்ள பாப்ஸ்கோவில் மொத்தம் 33 மதுக் கடைகள் இருந்தன.  நெடுஞ்சாலைகளில் மதுக் கடைகள் இருக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது புதுச்சேரி, காரைக்காலில் 21 மதுக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை பாப்ஸ்கோ நடத்தி வருகிறது. இச்சூழலில் 21 பாப்ஸ்கோ மதுக் கடைகள் உரிமம் புதுப்பிக்கப்படாததால் கலால்துறை சீல் வைத்துள்ளது. 
இது தொடர்பாக பாப்ஸ்கோ வட்டாரங்கள் கூறுகையில்,  பாப்ஸ்கோ சொந்த நிதியிலேயே நன்கு செயல்பட்டு வந்தது. கடந்த 2012 முதல் தவறான செயல்பாடு காரணமாக நலிவு நிலை நோக்கி செல்லத்தொடங்கியது.  தற்போது, 21 பாப்ஸ்கோ மதுக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.  ஏனெனில், ஒவ்வொரு ஆண்டும் மதுக்கடை உரிமத்தை பிப்.28-ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும். கலால்துறைக்கு ரூ.10 லட்சம் செலுத்தி உரிமத்தை உறுதி செய்ய வேண்டும்.
 அப்படி செலுத்தத் தவறினால் மார்ச் 31-க்குள் ஒரு லட்சம் கூடுதலாக சேர்த்து ரூ.11 லட்சமாக செலுத்தலாம். இந்தாண்டு மதுக்கடை உரிமத்தை புதுப்பிக்கவில்லை. அவகாசம் கோரப்பட்டுள்ளது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com