Enable Javscript for better performance
மோடிக்கு எதிரான சுனாமியால் அதிமுக கூட்டணி காணாமல் போகும்: காங்கிரஸ் செயலர் சஞ்சய் தத்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மோடிக்கு எதிரான சுனாமியால் அதிமுக கூட்டணி காணாமல் போகும்: காங்கிரஸ் செயலர் சஞ்சய் தத்

    By DIN  |   Published On : 12th April 2019 08:13 AM  |   Last Updated : 12th April 2019 08:13 AM  |  அ+அ அ-  |  

    மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிரான சுனாமியால் அதிமுக கூட்டணிக் கட்சிகள் காணாமல் போய்விடும் என்று அகில இந்திய காங்கிரஸ் செயலரும், புதுவை மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான சஞ்சய் தத் தெரிவித்தார்.
     புதுவை காங்கிரஸ் அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
     தமிழகம், புதுவையில் பிரதமர் மோடியின் பெயரை உச்சரிக்க பாஜக கூட்டணிக் கட்சிகள் பயப்படுகின்றன. புதுவையில் பாஜக நிர்வாகிகளை அழைத்துச் செல்லாமலும், மோடியின் படமின்றியும் என்.ஆர்.காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகிறது.
     மோடியின் பெயரைச் சொன்னால் கிடைக்கும் வாக்குகளும் சிதறிவிடும் என்பதை அதிமுக கூட்டணிக் கட்சிகள் நன்கு உணர்ந்துள்ளன.
     மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ரங்கசாமி பிரசாரம் செய்து வருகிறார். அவரது பேச்சு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
     கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்க "ஆபரேஷன் தாமரை' திட்டத்தை பாஜக மேற்கொண்டது போலவும், வட கிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய நிலையில், ஆளுநர்கள் மூலம் ஆட்சியைப் பறித்தது போலவும், புதுவையில் ஆட்சி மாற்றம் செய்ய ரங்கசாமி திட்டமிட்டுள்ளாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
     புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்துதான் ரங்கசாமி ஆட்சியைப் பிடித்தார். கடந்த மக்களவைத் தேர்தலிலும் இதே கோரிக்கையை முன்வைத்து தனது கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்தார். அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் மாநில அந்தஸ்து கோரிக்கை குறித்து வாய் திறக்கவில்லை.
     நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருப்பவர்கள் மக்கள் பிரச்னைகளுக்காக சட்டப்பேரவையிலும், வெளியிலும் வலுவாகக் குரல் கொடுக்கின்றனர்; செயல்படுகின்றனர். ஆனால், ரங்கசாமி அவ்வாறு செயல்பட்டாரா?
     மக்கள் பிரச்னைகளை வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை எதிரே முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்துக்கு ரங்கசாமி ஆதரவு தரவில்லை. ஆனால், தேர்தல் வந்தவுடன் மக்களைச் சந்தித்து மீண்டும் மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்து பிரசாரம் செய்கிறார். முதல்வர் நாற்காலி மீது மட்டுமே ரங்கசாமி குறியாக இருக்கிறார்.
     பாஜக தேர்தல் அறிக்கையில் புதுவைக்கு மாநில அந்தஸ்து அளிக்கும் வாக்குறுதி இடம் பெறவில்லை. மாநில அந்தஸ்தை அளிக்க பாஜக எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில், ரங்கசாமியால் எப்படி அதைப் பெற முடியும்?
     காங்கிரஸ், திமுக தேர்தல் அறிக்கைகளில் புதுவைக்கு மாநில அந்தஸ்து வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி பிரதமரானவுடன் புதுவைக்கு மாநில அந்தஸ்தை நிச்சயம் வழங்குவார்.
     தமிழகம், புதுவையில் மோடிக்கு எதிராகவும், ராகுல் காந்திக்கு ஆதரவாகவும் சுனாமி வீசத் தொடங்கியுள்ளது. இந்தச் சுனாமியில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் காணாமல் போய்விடும் என்றார் அவர்.
     பேட்டியின் போது புதுவை முதல்வரின் மக்களவைச் செயலர் க.லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.
     
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp