தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: போலீஸாருக்கு அறிவுரை

தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாருக்கு, போலீஸ் உயரதிகாரிகள் அறிவுறுத்தினர்.

தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாருக்கு, போலீஸ் உயரதிகாரிகள் அறிவுறுத்தினர்.
புதுவையில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் போலீஸாருக்கான தேர்தல் குறித்த இறுதிக்கட்ட ஆலோசனைக் கூட்டம் ஜிப்மர் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.  கூட்டத்துக்கு டிஐஜி ஈஸ்வர்சிங் தலைமை வகித்தார். புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அபூர்வ குப்தா முன்னிலை வகித்தார். 
காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், முதுநிலை காவலர்கள், காவலர்கள் உள்பட 900 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு வாக்குப்பதிவின் போது ஒதுக்கப்பட்டுள்ள பணி விவரங்கள் தெரிவிக்கப்பட்டு, யார் யார் எந்தெந்தப் பணிகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டன. வாக்குச்சாவடி மையங்களில் 100 மீட்டர், 200 மீட்டர் எல்லைக்கோடுகள் வரையப்பட்டுள்ள நிலையில் எந்தெந்த நபர்களை அனுமதிக்க வேண்டும். தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடுவோரிடம் எப்படி அங்கு பணியில் இருக்கும் அதிகாரிகள், போலீஸார் நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
வாக்குச்சாவடி மையத்துக்குள் போலீஸார் தேவையின்றி செல்லக்கூடாது. வாக்காளர்களை வரிசையில் நிறுத்தி, அமைதியான முறையில் வாக்களிக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எந்தப் பிரச்னை நடந்தாலும் உயரதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். 
தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக புதுச்சேரி வந்துள்ள துணை ராணுவப் படையினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com