சுடச்சுட

  

  சித்ரா பெளர்ணமியையொட்டி புதுவை ஓங்கார ஆசிரமம் சார்பில், புதுச்சேரி கடற்கரையில் வியாழக்கிழமை (ஏப். 18)-வெட்டவெளி தியான நிகழ்ச்சி நடைபெறுகிறது.
  இதுகுறித்து புதுவை ஓங்கார ஆசிரமம் வெளியிட்ட அறிக்கை: 
  புதுவை ஓங்கார ஆசிரமம் சார்பில் சித்ரா பெளர்ணமியையொட்டி ஒவ்வொரு ஆண்டும் திறந்தவெளி தியான நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 48-ஆவது ஆண்டாக திறந்தவெளி தியான நிகழ்ச்சி வரும் 18-ஆம் தேதி புதுவை கடற்கரை காந்தி திடலில் நடைபெறுகிறது. 
  தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சிக்கு ஓங்கார ஆசிரம அதிபர் சுவாமி கோடிசுவர நந்தா வரவேற்றுப் பேசுகிறார். இதையடுத்து ஜீவ முக்தியடைந்த பூஜ்யஸ்ரீ மகரிஷி பிரணவகுமாரி துறவி 
  (லட்சுமிபாய்) உருவப்படம் திறப்பு விழா நடைபெறுகிறது. 
  நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி முதல்வர் நாகராஜன், பொருளாதாரத் துறை தலைவர் ராமசாமி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். ஓங்கார ஆசிரம ஆத்ம சாதகர்கள் தியானம் குறித்து சிறப்புரை நிகழ்த்துகின்றனர். 
  தொடர்ந்து, ஓங்கார ஆசிரம மடாதிபதி சுவாமி ஓங்கார நந்தா அருளாசி வழங்கி தியானத்தை நடத்துகிறார். நிறைவில் மகா கையிலாயம் ஓங்கார ஆசிரம சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் நீதிக்குமார் நன்று கூறுகிறார். இதற்கான ஏற்பாடுகளை ஓங்கார ஆசிரம திறந்தவெளி தியானக் குழு செய்து வருகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai