சுடச்சுட

  

  புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் கைதியிடம் செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.
  புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சில நாள்களுக்கு முன்பு பாகூர் பகுதியில் கூட்டுக் கொள்ளையடிக்க திட்டமிட்ட கும்பலை பாகூர் போலீஸார் கைது செய்தனர். 
  இதில் முக்கிய குற்றவாளியான கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (27) என்பவரும் ஒருவர் ஆவார்.
  இந்த நிலையில், சிறையில் கைதிகள் செல்லிடப்பேசி பயன்படுத்தி வருவதாக சிறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 
  இதையடுத்து, சிறை அதிகாரிகள் அண்மையில் ரோந்து சென்ற போது,  கார்த்திகேயன் சிறை கழிப்பறையில் செல்லிடப்பேசியை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. 
  இதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளர் கோபிநாத்  காலாப்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai