சுடச்சுட

  

  நோட்டாவை தவிர்த்து  தகுதியுள்ளவருக்கு வாக்களிக்க வேண்டுகோள்

  By DIN  |   Published on : 17th April 2019 06:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நோட்டாவை தவிர்த்து தகுதியுள்ளவருக்கு வாக்களிக்க வேண்டும் என புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
  இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பின் கெளரவத் தலைவர் டி.ஆர். சேஷாச்சலம் வெளியிட்ட அறிக்கை:
   வரும் ஏப். 18-இல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் புதுவையில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், அரசு சார்பு நிறுவன ஊழியர்கள், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளைச் சேர்ந்த 50,000 ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் என ஏறக்குறைய 1.50 லட்சம் பேர் தங்களது வாக்கை செலுத்த உள்ளனர். அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
  வாக்களிக்கும் போது, நாம் கருத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களை ஆராய்ந்து, யார் புதுவையில் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்துக்குச் சென்றால் யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். புதுவை வளம்பெறும் என்பதை கருத்தில் கொண்டு, ஏதேனும் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். புதுவை அரசில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல நியாயமான கோபங்கள் இருந்தாலும், தேர்தல் நேரத்தில் வாக்கு எனும் ஆயுதத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும். 
  நோட்டாவை தவிர்த்து தகுதியுள்ள வேட்பாளருக்கு வாக்களிப்போம். வாக்களிப்பது நமது கடைமை மட்டுமல்ல; உரிமையும் கூட என்பதை உணர்ந்து தவறாமல் வாக்களிப்போம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai