சுடச்சுட

    

    புதுவை மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு, புதுச்சேரி வன்னியர் பாதுகாப்பு பேரியக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
    இந்த இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் வில்லியனூரில் 
    தனியார் மண்டபத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.  
    வன்னியர் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் அர்ச்சுனன் கவுண்டர் தலைமை வகித்தார். கூட்டத்தில், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து முடிவு எடுக்கப்பட்டது. 
     நிகழ்ச்சியில்,  முதல்வர்  நாராயணசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதுச்சேரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தின் வெற்றிக்கு வன்னியர் சமுதாய மக்கள் பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai