மத ரீதியில் வாக்குச் சேகரித்த காங்கிரஸ் மீது நடவடிக்கை: அதிமுக கோரிக்கை

மத ரீதியில் வாக்குச் சேகரித்த காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்தது.


மத ரீதியில் வாக்குச் சேகரித்த காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து, புதுவை சட்டப்பேரவை அதிமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர்ஆ.அன்பழகன் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: 
நடந்து முடிந்த புதுவை மக்களவைத் தொகுதி தேர்தல், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் அமைதியாக நடைபெற்றது.  இருப்பினும், ஆளும் காங்கிரஸ் அரசின் விதிமீறல்களை புதுவை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது வருத்தத்தை அளிக்கிறது.
குறிப்பாக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் இடத்துக்கு தகுந்த மாதிரி சாதி, மத ரீதியாக பிரசாரம் செய்தனர். மேலும், மதங்களுக்கு இடையிலான தேர்தலைப் போல முதல்வரும், அமைச்சர்களும்  பிரசாரம் செய்து குழப்பம் விளைவித்தனர்.
இது முழுக்க முழுக்க இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கும், தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கும் புறம்பானதாகும்.
இதுபோன்ற செயல் எதிர்காலத்தில் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் என்பதால், இதுகுறித்து புதுவை தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்காவிட்டால், அதிமுக  புகார் அளிக்கும். புதுவை மக்களவைத் தொகுதி தேர்தல், தட்டாஞ்சாவடி இடைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்களே  வெற்றி பெறுவர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com