வாக்காளர்களுக்கு ரங்கசாமி நன்றி
By DIN | Published On : 21st April 2019 04:22 AM | Last Updated : 21st April 2019 04:22 AM | அ+அ அ- |

புதுவை மக்களவைத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த பொதுமக்களுக்கு என்.ரங்கசாமி நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: புதுவை மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமிக்கு ஆதரவாக பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாமக, தேமுதிக, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர்.
மேலும், இந்தக் கூட்டணிக்கு ஆதரவாக பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள், மாணவர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.