சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை  வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 போலீஸார் உள்பட 18 பேரையும் விடுதலை செய்து புதுச்சேரி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை  வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 போலீஸார் உள்பட 18 பேரையும் விடுதலை செய்து புதுச்சேரி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
புதுச்சேரி லாசுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 சிறுமிகளை முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த புஷ்பா (43), புதுச்சேரி சவரிராயலு வீதியைச் சேர்ந்த அருள்மேரி (75) ஆகிய இருவரும் பாலியல் தொழிலில்  தள்ளியதுடன், சவரிராயலு வீதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து, அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினராம்.
இதற்கு போலீஸார் உள்பட பலர் உடந்தையாக இருந்ததாகவும் கூறி, கடந்த 2014 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெரியக்கடை
 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, இந்த வழக்கு புதுச்சேரி சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி போலீஸார், காவல் ஆய்வாளர்கள் சுந்தர், யுவராஜ், காவல் உதவி ஆய்வாளர்கள் அனுஷா பாஷா, பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன், முதல் நிலைக் காவலர்கள் குமாரவேலு, பண்டரிநாதன், காவலர்கள் சங்கர், செல்வக்குமார் ஆகியோரையும், புஷ்பா, அருள்மேரி, முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த ரகுமான் (29), மரக்காணத்தைச் சேர்ந்த மாணிக்கம் (22), சவரிராயலு வீதியைச் சேர்ந்த அருள்மேரி (75), நெல்லித்தோப்பைச் சேர்ந்த சந்தானஜெயப்பிரகாஷ் (28), லாசுப்பேட்டையைச் சேர்ந்த விமல்ராஜ் (24), புதுச்சேரியைச் சேர்ந்த சரவணன் (46), ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த ரவி (40), வாணரப்பேட்டையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (45) ஆகியோர் என மொத்தம் 18 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்தனர். 
இவர்களில், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமனை தவிர மீதமுள்ள 8 போலீஸாரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனிடையே, பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸார் உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் 
ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். 
இதைத் தொடர்ந்து, அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு புதுச்சேரி போக்ஸோ சட்டப் பிரிவு சிறப்பு நீதிபதியும், மாவட்டத் தலைமை நீதிபதியுமான தனபாலிடம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு பிறகு நீதிபதி, இந்த வழக்கில் போதிய சாட்சிகள் இல்லாததாலும், இருந்த சாட்சிகளும் பிறழ் சாட்சிகளாக மாறியதாலும் குற்றஞ்சாட்டப்பட்ட 9 போலீஸார் உள்பட 18 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com