Enable Javscript for better performance
அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க கவியரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் புதுச்சேரி கிளை சார்பில், "சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்' என்ற தலைப்பில் கவியரங்கம் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
    இந்திய சுதந்திரத்தைச் சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற இந்தக் கவியரங்கத்துக்கு பேராசிரியர் இரா.கமலா தலைமை வகித்தார்.
    நிகழ்வில் கல்வெட்டு ஆய்வாளர் சு. வேல்முருகன் பங்கேற்றுப் பேசியதாவது:
    உலகமே உறங்கிக் கிடந்த வேளையில், நாம் விழித்துக் கொண்ட தினம் சுதந்திரத் திருநாளான ஆகஸ்ட் 15. கணக்கிடலங்கா தியாகங்களால் கிடைத்ததே இந்த சுதந்திரம். அப்படிப்பட்ட சுதந்திரத்தைப் பேணிக் காக்க வேண்டியது நமது     
    ஒவ்வொருவரின் கடமையாகும் என்றார்.
    முன்னதாக, கவியரங்குக்கு வந்திருந்தவர்களை சொ. ஏழுமலை வரவேற்றார். செயலர் வேல். கார்த்திகேயன் அறிமுகவுரையாற்றினார். இதில் மதுரை, திண்டிவனம், பண்ருட்டி, விழுப்புரம், திருவண்ணாமலை, குன்னம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த கவிஞர்கள் பலர் கவிதை பாடினர். சங்கப் பொருளாளர் கோ. குணசேகர் நன்றி 
    கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai