தியாகிகளின் வாழ்க்கை வரலாற்று நூல்களை வெளியிட வேண்டுகோள்

தியாகிகளின் வாழ்க்கை வரலாற்று நூல்களை வெளியிட வேண்டும் என்று பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் கவிஞர் கோ.பாரதி வேண்டுகோள் விடுத்தார்.

தியாகிகளின் வாழ்க்கை வரலாற்று நூல்களை வெளியிட வேண்டும் என்று பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் கவிஞர் கோ.பாரதி வேண்டுகோள் விடுத்தார்.
அந்த அறக்கட்டளை சார்பில் நடைபெறும் மாதாந்திர இலக்கிய விழா புதுச்சேரி பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விடுதலைப் படைப்புகளும், பாவேந்தரும் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் கோ.பாரதி தலைமை வகித்துப் பேசியதாவது:
பாரதியாரும்,  பாரதிதாசனும் நாடு விடுதலை அடைவதற்காக எழுச்சியூட்டும் பாடல்களைப் பாடி,  விடுதலை இயக்கத்தை புதுவையில் நடத்தினர். பல்வேறு சமூக சீர்த்திருத்த கருத்துகள் கொண்ட பாடல்களை இயற்றினர். கவிதை உலகில் நட்புக்கு இலக்கணமாகவும் திகழ்ந்தனர்.
நல்ல நட்பு கிடைப்பது அரிதானது. தன்னலத்துக்காக நட்பை இழக்கக் கூடாது. 
பாரதியார், பாரதிதாசனார் போலவே விடுதலைக்காகப் பாடுபட்டவர்களை எண்ணிப் போற்ற வேண்டும்.  புதுவை அரசு தியாகிகளின் படம், வாழ்க்கை விவரத்துடன் கூடிய வரலாற்று நூல்களை வெளியிட வேண்டும். இணையத்திலும் இடம் பெறுமாறு செய்ய வேண்டும். அவற்றை இளைஞர்கள் படித்து பயன்பெற வழி ஏற்படும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பன்னாட்டு அரிமா சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வராஜு, கல்பாக்கம் அணுமின் நிலைய அதிகாரி வெற்றிவேந்தன் ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர். திரு.வி.க. குறித்து மாணவி சிவஸ்ரீயும், முதியோர் நலன் குறித்து மாணவி சுபலட்சுமியும் உரையாற்றினர். 
உலக நட்பு தினத்தை முன்னிட்டு உயிரினும் நட்பு பெரிதே என்ற தலைப்பில் கவிஞர்கள் கவிதை பாடினர்.
நிகழ்ச்சியில் தமிழ்மரபு உணவு மருந்து அமைப்பாளர் ராசி.ராமலிங்கராஜன், மாற்றுத் திறனாளி சாதனையாளர் அனிதா இம்மானுவேல் ஆகியோர் பாராட்டப்பட்டனர். 
கலைமாமணி செல்வதுரை நீஸ், படைப்பாளி ரமேஷ் பைரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com